• Oct 31 2025

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மாளவிகா நடிப்பது உண்மையா? அவரே வெளியிட்ட அதிரடிக் கருத்து.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் தனித்துவமான நாயகிகளின் பட்டியலில் மாளவிகா மோகனன் பிரபலமாக கண்டு கொள்ளப்படுகிறார். தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் “பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இந்த படங்கள் மட்டுமின்றி, மாளவிகா தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.


2021ஆம் ஆண்டு வெளியாகிய “மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனன் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கதாபாத்திரத்தின் நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் நடிப்பின் தனித்துவம் என்பவற்றின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். 

இதற்கிடையில், சமீபத்தில் இணையத்தில் பரவியுள்ள செய்திகளில், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள், அவரது அடுத்த படப்பிடிப்பு பணி குறித்து பெரும் ஆர்வம் காட்டினர்.


எனினும், மாளவிகா மோகனன், இந்த செய்தி தவறானது என்று தெளிவுபடுத்தி உள்ளார். அதன்போது, “சிரஞ்சீவி சாருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால், பாபி சார் இயக்கும் ‘மெகா 158’ படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இல்லை.” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement