பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் சரவணன் மயிலோட அப்பா கடையில் இருந்து காசு எடுக்கிறதைப் பார்க்கிறார். பின் மயில் கிட்ட போய் உங்கட அப்பா கல்லால கிடந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில போறார் என்று கோபமாகச் சொல்லுறார்.

பின் இந்த விஷயத்தை நீயே எப்புடியாவது எங்க அப்பா கிட்ட சொல்லு என்கிறார் சரவணன். மறுபக்கம் அரசி கணக்கில 1300 ரூபா குறையுது என்று பாண்டியன் கிட்ட சொல்லுறார். பின் சரவணன் மயிலைப் பார்த்து நீ மட்டும் உண்மையை சொல்லேல என்றால் நான் சொல்ல வேண்டி வரும் என்கிறார்.

அதைக் கேட்ட மயில் பையை தூக்கிக்கொண்டு ரூமை விட்டு வெளிய வந்து பாண்டியனைப் பார்த்து உங்க புள்ள தினமும் நான் கர்ப்பமா இருக்கிறேன் என்று பொய் சொல்லிட்டேன் என்று பேசுறார் அதுதான் நான் இங்கிருந்து கிளம்புறேன் என்று சொல்லுறார்.
Listen News!