• Jan 19 2025

இந்தியில் என்ட்ரி கொடுக்கும் யாஷ், விஜய் பட தயாரிப்பாளர்கள்..? மாஸ் அப்டேட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் நடிகர் யாஷ். இவர்களுக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களுடைய திரைப்படங்கள் வெளியாகும் போது பால்  அபிஷேகம், பட்டாசு என தியேட்டரையே கதற விட்டிருப்பார்கள்.

நடிகர் யாஷ் நடித்து வரும் திரைப்படம் தான் டாக்சிக். இந்த  திரைப்படத்தை மோகன் தாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாக  உள்ளதாக கூறப்படுகிறது

அதே போல இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 400 கோடிகளைத் தாண்டி வசூலில் சாதனை படைத்திருந்தது.


இதை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தான் தளபதி 69. இந்த படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகின்றது. இதில் பூஜா ஹெக்டே, சிம்ரன், மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இந்த இரண்டு படங்களையும் கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது .

இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கேவிஎன் நிறுவனம் தெஸ்பியன் பிலிம்ஸுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.  தற்போது இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது.


 

Advertisement

Advertisement