Met Gala எனும் மேடை தான் உலகத்தில் உள்ள மிகப்பெரும் பெஷன் மேடை. ஆண்டுதோறும் மே மாதம் முதல் திங்கட்கிழமையில் நடைபெறும் இந்த ஐக்கிய அமெரிக்கா பெஷன் இன்ஸ்டிடியூட் நிகழ்ச்சியில் பங்கேற்பது போட்டியாளர்களுக்கு பெரிய மரியாதையைக் கொடுக்கும்.
இந்த ஆண்டின் Met Gala நிகழ்வில் பார்வைகளை திருப்பியதோடு, வரலாற்றைறையும் மாற்றி எழுதியிருக்கிறார் நடிகை கியாரா அத்வானி. இந்திய சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இந்த அழகான நட்சத்திரம், தனது கர்ப்ப நிலையில் “baby bump”ஐ வெளிக்காட்டும் ஆடையில் Met Galaவில் கலந்துகொண்டு, ஒரு புதுமை சாதனையையும் ஆற்றல் மிக்க உடல்மொழியையும் உலகுக்கு காண்பித்துள்ளார்.
அழகிய கறுப்பு நிற ஆடையுடன் தன் கர்ப்பத்தை வலியுறுத்தும் பாணியில் Met Gala நிகழ்வில் கலந்து கொண்ட கியாரா, தன்னம்பிக்கையின் உருவமாக திகழ்ந்துள்ளார். Met Gala மேடையில் கலந்து கொள்வது இந்திய நடிகைகளுக்கு புதிதல்ல. குறிப்பாக, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் இதற்கு முன்னதாக பங்கேற்றுள்ளனர். ஆனால், கர்ப்ப நிலையுடன் கலந்து கொண்ட முதல் இந்திய நடிகை என்பது கியாரா அத்வானி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!