• May 06 2025

அட்றா சக்க! விஜயாகிட்ட இருந்து இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்ல..சிந்தாமணி ஆட்டம் close!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து அம்மா அழுகுறதே ஆச்சரியம் அதிலயும் மனோஜ் அம்மாவ வெளியில போகச் சொல்லியிருக்கான் என்றால் அது மிகப்பெரிய ஆச்சரியம் என்றார். அதனை அடுத்து ரவி அம்மா நிஜமா மனோஜா இப்படிச் சொன்னான் என்று கேக்கிறார். அதுக்கு விஜயா ஆமாடா ரூமவிட்டு வெளியில போ என்று கோபமா கத்திட்டான் என அழுதுகொண்டு சொல்லுறார்.

அதைக் கேட்ட முத்து அவன் ஏன் அப்புடி சொன்னான் என்று மனோஜுட்ட கேட்போம் என்கிறார். இதனைத் தொடர்ந்து மனோஜ் விஜயா கிட்ட வந்து ஏன் அம்மா அழுது கொண்டிருக்கீங்க என்று கேக்கிறார். அதுக்கு முத்து அம்மாவ நீதான் கோபமா பேசிப்போட்ட அதுதான் அழுகிறா என்று சொல்லுறார். பின் விஜயா தன்ன மனோஜுக்கு பிடிக்கல அதுதான் என்னைய வெளியில போகச் சொல்லிட்டான் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து மனோஜுக்கு இப்பவெல்லாம் பேசுறதுக்கு வேற ஆட்கள் இருக்கினம் அதுதான் இவன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான் என்கிறார். பின் மனோஜ், தான் இப்படி சொன்னதுக்காக முட்டி போட்டு மன்னிப்புக் கேக்கிறார். அதைப் பார்த்த விஜயா ரொம்பவே சந்தோசப்படுறார். மேலும் மனோஜ் உனக்கு கால் வலிக்கும் எழும்பு என்று சொல்லுறார்.

இதனை அடுத்து சிந்தாமணி, முத்து வீட்ட வந்து பணத்த எடுத்ததைப் பற்றி விஜயாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா நீங்க பண்ணது தப்பு என்று சொல்லிக் கோபப்படுறார். இதனை அடுத்து சிந்தாமணியை எதிர்த்து மீனாவுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் விஜயா. அதைப் பார்த்த பார்வதி நீ இனிமேல் இப்படியே இரு மாறாத என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement