• Jul 01 2024

கமல் ஊழலை ஒழிக்கும் காட்சி இப்படி தான் இருக்குமா? சர்ச்சையை கிளப்பிய ட்விட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நாட்டில் நடக்கின்ற ஊழல்களை தட்டிக் கேட்கின்ற சம்பவம் படங்களில் அதிக அளவு காட்டப்படுகின்றன. ஆனால் அவை படங்களை மட்டும் தான் சாத்தியமாகும். நிஜத்தில் ஒன்றுமே நடக்காது. படத்தின் இறுதியில் ஊழல் வாதிகளை ஹீரோ அல்லது பொதுமக்கள் இல்லாது ஒழிப்பது போலவும் தண்டிப்பது போலவும் காட்டுவார்கள். இது படத்தோடு முடிந்துவிடும் கதையாக காணப்படும்.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் நடித்த கமலுடன், கவுண்டமணி, ஊர்மிளா, சுகன்யா, மனிஷா கொய்ராலா என பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால் தனது மகளை இழந்த ஒரு சுதந்திர போராட்ட தியாகி ஆவேசத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட செலவில் சங்கர்  தயாரிப்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியன் 2வது பாகத்தில் கமலஹாசன் உடன் நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சனரான ப்ளூ தட்டை மாறன் தனது twitter பக்கத்தில் கமல் திரைப்படங்களில் மட்டும் ஊழலை ஒழிக்கும் காட்சி என பதிவிட்டு செந்தில் காமெடி காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதாவது செந்தில் நடித்த காமெடிகளில், ஸ்வீட் கடையில் ஈ மொய்க்காமல் இருக்க செந்தில் மருந்து அடிக்கும் காட்சி காணப்படும். அந்த காட்சியை தற்போது கமல் ஊழலை ஒழிக்கும் காட்சி என பதிவிட்டு பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை.

Advertisement

Advertisement