தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதன்படி நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற ஒரு சில படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுக் கொடுத்தன. எனினும் சமீபத்தில் வெளியான ரோமியோ திரைப்படம் பெரிதளவில் பேசப்படவில்லை.
விஜய் ஆண்டனியின் படங்களை காட்டிலும் அவற்றின் தலைப்புகள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். அந்த வகையில் பிச்சைக்காரன், சாத்தான், இந்தியா பாகிஸ்தான், கொலை, இரத்தம், எமன், திமிரு புடிச்சவன், தமிழரசன், நான் போன்ற பெயர்களை கேட்டாலே கொஞ்சம் பயங்கரமாக தான் இருக்கும்.
தற்போது விஜய் ஆண்டனி நடித்தவரும் படம் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளதோடு, இதன் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் மழை பிடிக்காத மனிதன் டெய்லர் வெளியிட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி முகத்தில் கரி பூசி காணப்பட்டுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஆனாலும் அது படத்திற்காக போட்ட மேக்கப் என்றும், அதை எடுக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அப்படியே நிகழ்ச்சிக்கு வந்து விட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
#Vijayantony at #MazhaiPidikkathaManithan Trailer Launch 😎
— Esh Vishal (@eshvishal) June 29, 2024
His new Getup 🤔❓ pic.twitter.com/ljeBseqcjd
Listen News!