தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் படைப்பில், ஹாலிவுட் பாணியில் Found Footage என்ற முறை பயன்படுத்தப்பட்டு ஹேமந்த் நாராயணன் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் ‘மர்மர்’ ஆகும்.
Found Footage என்பது, ஒரு திரைப்படம் முற்றிலும் காணாமல் போன அல்லது கண்டுபிடிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டதாகக் காட்டும் ஒளிப்பதிவு முறை ஆகும். இது வெகு சிறிய பட்ஜெட்டில் மிகுந்த த்ரில்லுடன் உருவாகியுள்ளது.
உலகத் திரைப்பட வரலாற்றில் பல படங்கள் Found Footage முறையில் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளன. இப்போது, இந்த முயற்சி தமிழ் சினிமாவும் ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகில் புதிய சுவாரஸ்ய முயற்சியாக உருவாகியுள்ள ‘மர்மர்’ திரைப்படம், Found Footage முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் முழுவதும் ஹாரர் மற்றும் த்ரில்லர் கலந்த வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
இந்த படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாமல் ஒரு உண்மையான சம்பவம் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் சினிமாவின் முதல் Found Footage படம் என்பதால், ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!