தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன், தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் கமல் தனது அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது வெளியான தகவலின் படி அந்தப் படத்திற்கு ‘KH237’ என பெயரிடப்பட்டுள்ளனர். இந்த புதுமையான தலைப்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இப்படத்தை அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
“KH237 பற்றிய கூடிய தகவல்களை விரைவில் அறிவிப்பதாக கூறியதுடன் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘KH237’ படம், தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் புதுமையான கதைக்களம் இதை மேலும் சிறப்பாக மாற்றும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Listen News!