• Apr 02 2025

ரோகிணியின் களவைக் கண்டுபிடிக்க திட்டமிடும் முத்து..! வெளிவருமா உண்மை..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனான்ர தங்கச்சி தன்ர லவ்வரோட பைக்கில போறார். இதனை அடுத்து மீனா முத்துவிடம் உங்க அண்ணா எங்கயோ போய்ட்டார் என்று சொல்லுறார். அதுக்கு முத்து, அவன் போனால் போகட்டும் நீ ஏன் டென்சனாகுற என்று கேக்கிறார். மேலும் அவன் என்ன சின்னப் பிள்ளையா வந்திடுவான் விடு என்றதுடன் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கன் சாப்பிடுவம் வா என்கிறார். அதுக்கு மீனா எதுக்கு சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கீங்க என்று கேக்கிறார்.

அதைக் கேட்ட முத்து வீட்டில யாரும் இல்ல நீயும் நானும் மட்டும் தானே அதுதான் வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து கையில இருக்கிற காயம் ஆறிடுச்சா என்று கேக்கிறார். அதுக்கு மீனா ஓரளவுக்கு ஆறிடுச்சு என்று சொல்லுறார். இதனைக் கேட்ட முத்து நீ வலிச்சாலும் சொல்லவா போறா என்று சொல்லுறார். பின் நானே உனக்கு ஊட்டிவிடுறேன் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து நாங்க அந்த கறிக்கடைக்காரன கூட்டிக்கொண்டு வந்தது தப்பு என மீனா சொல்லுறார். அதுக்கு முத்து பார்லர் அம்மா எங்க எல்லாருக்கும் சொன்ன பொய்க்கு இப்படித் தான் செய்யனும் என்று சொல்லுறார். மேலும் இதுக்கெல்லாம் நீ பீல் பண்ணாதா என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து ரெண்டு பேரும் ரோகிணிட ரூமுக்க போய் எதையோ தேடுகிறார்கள்.

அந்த நேரம் அங்க மனோஜ் வந்து நிக்கிறார். அவர் வந்து நிக்கிறதப் பாத்து முத்து ஷாக் ஆகுறார். பின் ஸ்ருதி மீனாவுக்கு கால் எடுத்து நாங்க உடனே வீட்ட வந்திடுறம் என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனாவும் முத்துவும் ரோகிணியப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்டு மனோஜ் கோபம் கொள்ளுறார். இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement