பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, அமிர்தா பாக்கியாவிடம் ரெஸ்டாரெண்ட் வாங்கிறதுக்கு வந்த சுதாகருக்கு நிறைய ரெஸ்டாரெண்ட் இருக்குது என்று சொல்லுறார். மேலும் அந்தத் திமிரில தான் அவர் உங்கள மிரட்டிட்டுப் போய் இருக்கார் என்று சொல்லுறார். அப்ப இனியா வந்து ஏன் அம்மா என்ன பிரச்சன என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா அதெல்லாம் ஒன்னும் இல்ல இனியா, ஒரு சின்ன விஷயம் நடந்திட்டு அதுதான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அமிர்தா, வீடு தேடிவந்து மிரட்டுறது சின்ன விஷயமா என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து அம்மா யாரு மிரட்டினாங்க என்று சொல்லுங்கோ என்கிறார் இனியா. அதனை அடுத்து அமிர்தா நடந்ததெல்லாத்தையும் இனியாவுக்கு சொல்லுறார். அதைக் கேட்ட இனியா இதையா அம்மா சின்ன விஷயம் என்று சொல்லுறீங்க எனக் கேக்கிறார். அதுக்கு பாக்கியா இனி ஏதும் பிரச்சன என்றா என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுறேன் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து பாக்கியா, இனியாவிடம் உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா என்று கேக்கிறார். அடுத்து என்ன செய்யுற பிளான் என்றும் கேக்கிறார். அதுக்கு இனியா கொஞ்சம் கொஞ்சமா எல்லா வேலையும் கத்துக் கொண்டு முன்னேறனும் என்று சொல்லுறார்.அதைக் கேட்ட பாக்கியா பிளான் எல்லாம் நல்லாத் தான் இருக்கு நடக்குமா என்று கேக்கிறார். அதெல்லாம் நடக்கும் என்று இனியா சொல்லுறார்.
மேலும் பாக்கியா வேலையைப் பாத்துக் கொண்டு நீ படி என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா சரி அம்மா நான் படிக்கிறேன் என்று சொல்லுறார். பின் கோபியும் செழியனும் இனியாவுக்கு மாப்பிள பாத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ரெஸ்டாரெண்டில நிறையப் பேர் வாறதப் பாத்து அமிர்தா ஷாக் ஆகுறாள். பின் அமிர்தா என்ன நடந்தாலும் இந்த ரெஸ்டாரெண்ட விட்டிராதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து சுதாகர் கோபியிடம் தன்ர மகனுக்கு இனியாவப் பிடிச்சிருக்கு என்று சொல்லுறார். அதுக்கு கோபி உடனே சம்மதம் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!