• Jun 26 2024

கோவை ஈஷா தியான மையத்திற்கு நடிகைகள் அடிக்கடி செல்வது ஏன்? பயில்வான் சொன்ன திடுக் தகவல்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

கோவை ஈஷா தியான மையத்திற்கு சமந்தா, தமன்னா உட்பட சில தமிழ் நடிகைகளும் கங்கனா ரனாவத் உட்பட பல பாலிவுட் நடிகைகளும் அவ்வப்போது சென்று வருகிறார்கள் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் நடிகைகள் அங்கு சென்று தியானத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் அவர்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் அடிக்கடி நடிகைகள் கோவை ஈஷா மையத்திற்கு செல்வது ஏன் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

பொதுவாக எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும், மூடநம்பிக்கை இல்லை என்றும், நான் மூன்று முறை கோவை ஈஷா தியான மையத்திற்கு சென்று உள்ளேன் என்றும், முதல் முறை செல்லும்போது அங்கு ஏதாவது தில்லுமுல்லு நடக்கிறதா? முறைகேடு நடக்கிறதா? என்பதை கண்டுபிடித்து அது குறித்து வீடியோ வெளியிட வேண்டும் என்று நினைத்து தான் சென்றேன் என்றும் தெரிவித்தார்.



ஆனால் முதல் முறை உள்ளே சென்றதுமே எனக்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைத்தது என்றும், உண்மையில் அங்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கிறது என்றும், மனதில் உள்ள அழுக்கு எல்லாம் வெளியேறிடுவது வெளியேறிவிடுகிறது என்றும், நான் என்ன நினைத்து உள்ளே சென்றேன் அதற்கு நேர்மாறாக எனக்கு முழுமையான மன நிம்மதி கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவர் மன நிம்மதியை தேடி தான் கோவை ஈஷா தியான  மையத்திற்கு   வந்திருக்கிறார் என்றும் அதேபோல்  தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கங்கனா ரனாவத் நிம்மதியை தேடி தான் அங்கு வந்திருக்கிறார் என்பதையும் அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்.

ஒருமுறை கோவை ஈஷா மையத்திற்கு சென்றவர்கள் கண்டிப்பாக அடுத்தடுத்து செல்வார்கள் என்றும் அந்த அளவுக்கு அங்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கிறது என்றும் மன நிம்மதி கிடைக்கிறது என்றும் நடிகைகள் அடிக்கடி அங்கு செல்வதற்கு காரணம் மன நிம்மதியை தேடி தான் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன்’ என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement