பிரபல அமெரிக்க திரைப்படமான 'பிரேக் டவுன்' என்ற படத்தை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'விடாமுயற்சி'. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க, அதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோகளுக்கு மாஸ் ஓபனிங் இருந்து வரும் நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி முதல் நாளில் மட்டுமே வசூலில் அதிக லாபம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் சரிவை சந்தித்தது.
மேலும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிய கிட்டத்தட்ட 10 நாட்களைக் கடந்த நிலையில் இதன் மொத்த வசூலே 126 கோடி என கூறப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பை குழுவினர் வெளியிடவில்லை.
மேலும் விடுமுறை நாட்கள் ஆன சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடாமுயற்சி படத்தை பார்க்க வருவோரின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி என சொல்லப்பட்ட நிலையில் அதனை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது வாரமும் வசூல் வேட்டையில் விடாமுயற்சி என தயாரிப்பாளர் தனஞ்செழியன் தெரிவித்த நிலையில், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகின்றது.
மேலும் அவருடைய பதிவில், விடாமுயற்சி திரைப்படம் தோல்வி என்று லைக்கா நிறுவனம், தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்களுக்கு மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களுக்கே தெரியும். அது உங்களுடைய மனசாட்சிக்கும் தெரியும்.. ஆகவே இப்படியான பொய்யான தகவல்களை சொல்வதை நிறுத்துங்கள் என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
Listen News!