ஏ. ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது சிவகார்த்திகேயனுக்கு 23 வது படமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த படத்திற்கான டைட்டில் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திற்கான டைட்டில் நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.
d_i_a
அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 23 வது படத்தின் பெயர் கிளிம்ஸ் வீடியோவை 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கு இடையில் பிரபல நடிகர் சல்மான் கானை வைத்து இயக்கும் படத்திற்காக முருகதாஸ் திடீரென மும்பை சென்றார். இதனால் எஸ்கேயின் படப்பிடிப்புகள் தடைப்பட்டது.
அதன் பின்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அது தொடர்பிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இவ்வாறான நிலையிலே தற்போது எஸ்கேயின் 23வது படத்திற்கான பெயர் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Listen News!