• Aug 14 2025

நடிகர் மகேந்திரனின் கருத்தால் நீயா நானாவில் வெடித்த விவாதம்! நடந்தது என்ன..?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து, தற்போது குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்து வரும் நடிகர் மகேந்திரன்,   விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். "சினிமா விமர்சகர்கள் vs நடிகர்கள்" என்ற தீவிரமான தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில், நடிகர்களும் விமர்சகர்களும் நேரடியாக மோதினர்.


அதில் கருத்து சுதந்திரத்தின் தாக்கத்தைக் காணக்கூடிய சலசலப்பான தருணம் ஒன்று நிகழ்ந்தது. விமர்சகர் ஒருவர், மகேந்திரன் தனது திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகளை அதிகமாகப் பேசியிருப்பதை விமர்சித்திருந்தார். 

அதற்கும் பதிலளிக்கும்போது மகேந்திரன், “நான் அந்த கதாபாத்திரத்துக்காகவே அந்த வார்த்தைகளை பேசினேன். அதையும் பெண்கள் கூட ஏற்றுக்கொண்டார்கள். அது ஒரு இயல்பு என அவர்களே உணர்ந்தார்கள். ஆனால் விமர்சகர்கள் அதை பொருத்தமற்றதாக விமர்சிக்கின்றார்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.


மகேந்திரனின் இந்தக் கூற்றுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற விமர்சகர் ஒருவர் பதிலளிக்கும்போது, “கெட்ட வார்த்தைகளை பேசுவது ஒரு கதாபாத்திரத்திற்குள் இருக்கலாம். ஆனால், நீங்கள் அந்த வார்த்தைகளின் பயன்பாட்டை ‘glorify’ செய்வது சரியில்லை. அதை நீங்கள் சொல்வதில் என்ன பெருமை.” என கண்டித்தார். இவ்வாறாக நீயா நானா நிகழ்ச்சியில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement