• Jul 23 2025

கையில் கேமரா... முகத்தில் சிரிப்பு..! – ஜனனியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் வைரல்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து கொண்டவர் நடிகை ஜனனி. தனது சிறப்பான பேச்சுத்திறன், அழகு மற்றும் ரசிகர்களுடன் வெளிப்படையாக பழகும் மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.


சமீபத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது, அவரது திரைப்பட பயணத்தை  புதிய உயரத்திற்கு எடுத்துச்செல்ல காரணமாகியது. அதைத் தொடர்ந்து, தற்போது பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்தகைய, ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், கையில் கேமராவை வைத்தபடி, நேர்த்தியான உடையிலும், ஸ்டைலான போஸிலும் தோன்றி இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "நீங்க என்ன செய்தாலும் அழகு தான்..!" என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ..!

Advertisement

Advertisement