• Oct 13 2024

டிஆர்பிக்காக தீயாய் வேலைசெய்யும் விஜய் டிவி! பஞ்சாயத்தை தீர்க்க தயாராகும் விஜய்சேதுபது!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் சீசன் 8 வரும் ஆறாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இவர்கள்தான் போட்டியாளர்கள் என ஒரு லிஸ்ட் மீடியாவை சுற்றி வருகிறது. 


தற்போது உறுதியான சில போட்டியாளர்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த தர்ஷா குப்தா, விஜே விஷால் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் விஜய் டிவியில் இருந்து தற்போது காணாமல் போன தொகுப்பாளினி ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கிறார்.


அவரை தொடர்ந்து சமீபத்தில் பயங்கர சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்ராவின் முன்னால் கணவரான கார்த்திக் குமார் பங்கேற்க உள்ளார். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனாவும் போட்டியாளராக களம் இறங்க உள்ளார். இவரைத் தொடர்ந்து காதல் ஜோடியான சோயா, டிடிஎஃப் வாசன் பங்கேற்கின்றனர். அடுத்ததாக குக் வித் கோமாளியில் லேடி டான் போல் இருந்த அன்ஷிதாவும் பங்கேற்க உள்ளார்.


செல்லம்மா சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த அர்ணவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கிறார். இதை அடுத்து சுனிதாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எப்படியும் உறுதியாகிவிடும் என்கின்றனர். மேலும் மாடல் சௌந்தர்யா, TSK உள்ளிட்டோரும் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.  இது எல்லாம் பார்க்கும் போது டிஆர்பிக்காக தீயாய் வேலைசெய்கிறது விஜய் டிவி. அதே போல் விஜய் சேதுபதிக்கும் அதிக பஞ்சாயத்து இருக்கும் என தெரிகிறது. ரசிகர்களிடத்திலும் அதிகளவு எதிர்பார்ப்பு இந்த சீசனுக்கு இருக்கிறது. 

Advertisement