• Dec 07 2024

அடுத்த மாதம் கோவாவில் திருமணம்! குடும்பத்தோடு திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் தரிசனம்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் காதலித்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களின் திருமணம்  டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தொழிலதிபராக மாறிய பொறியாளரான ஆண்டனி தட்டில், கீர்த்தியை பள்ளி நாட்களில் இருந்தே அறிந்தவர். 12 ஆம் வகுப்பில் இருந்த அவர்களது நட்பின் மூலம். சுரேஷ் இருவரும் 15 வருடமாக காதலித்து வருகின்றனர்.


அவர் கேரளாவை தளமாகக் கொண்ட ஆஸ்பெரோஸ் என்ற விண்டோ தீர்வுகள் வணிகத்தின் உரிமையாளராக உள்ளார், மேலும் மாநிலத்தில் விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டிகளில் கூறிவருகிறார். அத்தோடு தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 15 வருடமாக தான் காதலிப்பதாக பகிர்ந்திருந்தார். 


இந்நிலையில் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ். தனது படம் ரிலீசாக இருக்கிறது அதற்காகவும் அடுத்த மாதம் கோவாவில் தனக்கும் ஆண்டனிக்கும் திருமணம் நடைபெற உள்ளது அதற்காகவும் பூஜை செய்வதற்காக திருப்பதி வந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement