• Feb 22 2025

ஹல்டி விழாவோடு ஆரம்பமானது நாக சைதன்யா, சோபிதா திருமணம்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமணம் டிசம்பர் 4ம் திகதி கோலாகலமாக நடைபெறயுள்ளது. சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நாகா சைத்தன்யா சோபிதா இடையே மலர்ந்த காதல் தற்போது திருமணம் வரை வந்துள்ளது.


இருவீட்டார் சமந்தத்துடன் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சியதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகிவந்தது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் ஹல்டி விழா நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஹல்டியுடன் தொடங்கியது, இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது . மஞ்சள் நிற ஆடையில் குடும்பத்தாருடன் இவர்கள் மகிழ்ச்சியாக தங்களது விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement