• Feb 22 2025

மத்தவங்க ஜெயிக்க கூடாதுனு எனக்கு விழுந்த ஓட்டுகள் தான் அதிகம்! உண்மையை உளறிய அர்ச்சனா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா, தான் PR மூலம் வெற்றி பெற்றதாக கூறிய அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நான் 19 கோடி ஓட்டு பிஆர் மூலமாக வாங்கியதாக சொல்லிட்டு இருக்காங்க. ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய்னு வச்சிக்கிட்டா கூட 19 கோடி செலவு ஆகுமே? சரி ஒரு கோடி ஓட்டை சொல்லுங்க. அதுக்கு கூட 1 கோடி ஆகும். நான் ஏன் அவ்வளவு செலவு செய்யணும்.

ஒரு சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து அதில் ஹீரோயினாக நடித்துவிட மாட்டேனா? என்று தான் தோன்றுகிறது. நான் பிஆர் மூலமாக வெற்றி பெறவில்லை. பப்ளிக் ரெஸ்பான்ஸ் என்னும் பிஆர் மூலமாக தான் வென்றேன். 


நான் ஒவ்வொரு எலிமினேஷனில் வரும் போதும் நான் வெளிய போகணும் என்ற ஆசையே அதிகமாக இருந்தது. அதிலும் பைனல் வாரம் மிகவும் உயிர் பயத்தினையே காட்டிட்டு. எப்போடா வெளியேறுவோம் என்ற நிலையில் இருந்தேன். 


முதலில் எனக்கும் பிரதீப்புக்குமே சண்டை வந்தது. ஆனா அப்புறம் சமாதானம் ஆனோம். பிரதீப் எனக்கு டிரெஸ் அயர்ன் பண்ணி கூட தந்தார்.மாயாவை கணிக்கவே முடியாது. அவங்க ஒரு மாயை என்றார்.

அதுமட்டுமின்றி என்னை பிடிச்சு ஓட்டு போட்டவங்க நிறைய பேரு. ஆனால் மத்தவங்க ஜெயிக்க கூடாதுனு எனக்கு வந்த ஓட்டுக்களும் நிறைய எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement