• Feb 23 2025

சொல்ல முடியாத சோகம்... சந்தியா ராகம் தொடரில் இருந்து வெளியேறிய நடிகை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் தொடர் கடந்த வருடம் அக்டோபரில் ஒளிபரப்பை தொடங்கியது. தற்போது 75 எபிசோடுகளை கடந்து சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த VJ தாரா தற்போது திடீரென வெளியேறி இருக்கிறார். 


அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை தாரா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். 'கனத்த இதயத்துடன் சந்தியா ராகம் தொடரில் இருந்து வெளியேறுகிறேன்.


என்ன பிரச்சனை என்பதை கண்டிப்பாக வெளியில் சொல்ல முடியாது' என குறிப்பிட்டு இருக்கிறார். என்ன பிரச்சினை என ரசிகர்களும் கேட்டு வரும் நிலையில், சீரியல் குழு உடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் வெளியேறிவிட்டாரா என கேள்வி எழுந்திருக்கிறது.அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாக கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.  


Advertisement

Advertisement