தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்று கூடி கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திரையுலகத்தை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் ஒரே இடத்தில் சந்தித்து, பண்டிகையை கொண்டாடிய இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி நடிகர்களான சரத்குமார், ராதிகா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், இளம் தலைமுறை நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயனும், த்ரிஷாவும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று அனைவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.

பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் ஒரே இடத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மூத்த நடிகர்களுடன் சிவகார்த்திகேயன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிரபலங்கள் ஒன்றுகூடிய இந்தக் கொண்டாட்டம், திரையுலகத்தில் நிலவும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!