விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் தற்பொழுது மயில் குடும்பத்தால் எதிர்பாராத பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி மக்களைக் கவர்ந்துள்ளது. அதில், முத்துவேல் மற்றும் சக்திவேல் கோமதி குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காக பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் நிற்கிறார்கள். முத்துவேலைப் பார்த்த உடனே ராஜி, அப்பா என்று சொல்லி கதறி அழுகிறார்.
அதைப் பார்த்த முத்துவேல் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்கிறார். மேலும், கோமதி அண்ணா.! என்று சொல்லி அழுதவுடனே முத்துவேல் கையைப் பிடித்து ஆறுதல் கூறுறார். அதைப் பார்த்த பாண்டியன் ஷாக் ஆகுறார்.

பின் சக்திவேல் இன்ஸ்பெக்டர் கிட்ட போய் இவங்க யாரும் எந்த தப்பும் செய்திருக்க மாட்டாங்க.. அவங்கள எதுக்காக ஸ்டேஷன் வரை கொண்டுவந்தனீங்க என்று கேட்கிறார். அதுக்கு இன்ஸ்பெக்டர் அவங்க மருமகள் குடும்பத்தில இருந்து தான் கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க என்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது...
Listen News!