தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சூரி, இன்று ஒரு முழுமையான நடிகராக புதிய பயணத்தில் முன்னேறி வருகிறார். ஒருகாலத்தில் காமெடியன் என்ற அடையாளத்துடன் மட்டுமே பார்க்கப்பட்ட அவர், தற்போது கதாநாயகனாக மாறி, தன்னுடைய திறமையை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சூரி சமீபத்தில் கூறியுள்ள ஒரு அட்வைஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவரது வார்த்தைகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
சூரி அதன்போது, “அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு, ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது. வாழ்க்கையில் நிறைய அவமானங்கள் வரும். அதுக்கு ரியாக்ட் செய்யாதீர்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்த ஒரு வரி, வாழ்க்கையின் கடினத்தையும் , வெற்றியின் அர்த்தத்தையும் மிக எளிமையாக எடுத்துரைத்துள்ளது.
சினிமாவில் பல ஆண்டுகள் போராடி, நிராகரிப்புகள், விமர்சனங்கள், அவமானங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு இன்று இந்த இடத்தை அடைந்தவர் என்பதால், சூரியின் இந்த வார்த்தைகள் வெறும் அறிவுரை அல்ல, அனுபவத்தின் குரல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!