விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வாங்கிய கடனுக்காக வீட்டை அடகு வைத்து அண்ணாமலை கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார் . கந்துவட்டிக்காரர் போகும்போது பணத்தை மீள கொடுக்கவில்லை என்றால் இந்த வீட்டில் இருந்து ஒருவரை கட்டாயம் தூக்குவேன் என்று எச்சரித்துச் செல்கின்றார்.
அதன் பின்பு முத்து, மனோஜுக்காக எதற்கு நீ சைன் பண்ணி கொடுத்த என்று அண்ணாமலையை கேட்க, விஜயாவும் இது எல்லாம் உன்னால தான் என்று ரோகிணிக்கு திட்டுகின்றார். அந்த நேரத்தில் நான் வாங்கிய கடனை நானே கட்டுகின்றேன். ஆனால் எனக்கானதை பிரித்துக் கொடுங்கள் என்று சொத்தை பிரித்து கேட்கின்றார் மனோஜ்.
இதை கேட்டு கோவப்பட்ட விஜயா, நீ பட்ட கடனை நீதான் கட்ட வேண்டும்.. சொத்தை கூறு போட நான் விடமாட்டேன் என்று மனோஜ்க்கு திட்டுகின்றார் . இதனால் முத்துவும் அவருடன் சண்டை போடுகின்றார் .

அதற்குப் பிறகு ரூமுக்குள் சென்ற மனோஜை கிரிஷ் டாடி என்று சொல்லி அணைத்து கொள்கின்றார். இதை பார்த்து கோபப்பட்ட மனோஜ் க்ரிஷை அடிக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி வந்து எதற்காக க்ரிஷை அடிக்கிறா என்று கேட்க, அவர் கல்யாணி என்று நினைத்து ரோகிணியின் கழுத்தை நெரிக்கின்றார்.
நள்ளிரவில் அண்ணாமலை தூங்காமல் வெளியே வந்து கண்கலங்க, அதை பார்த்து முத்துவும் மீனாவும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும் அண்ணாமலை சொத்தை பிரித்து கொடுப்பதாக சொல்ல, முத்து வேண்டாம் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!