• Dec 29 2025

மூன்று நாட்களாக சிகிச்சைபெற்றுவரும் பாரதி ராஜாவின் தற்போதைய நிலை என்ன.?

Aathira / 10 hours ago

Advertisement

Listen News!

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மகன் மனோஜ் மாரடைப்பு  ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.

அவருடைய இறப்பு பாரதிராஜாவை மிகப் பெரிய அளவில் பாதித்தது. மேலும் அவரை மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. அன்று முதலே சோர்வாக இருந்து வருகின்றார் பாரதிராஜா.  அதற்கு பின்பு தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.. 

கடந்த மாதம் தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பாரதிராஜாவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், மூன்று நாட்களாக பாரதிராஜாவுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது வழக்கமான சோதனை இல்லை என்றும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தகவல்கள் கூறப்பட்டுள்ளது. 

எனினும்  பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து எந்த வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement