பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபலங்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சமையல் செய்து வருகின்றார். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
எனினும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை வலுத்த நிலையில், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி தான் திருமணம் செய்தார் என்று அறிக்கையை வெளியிட்டார். மேலும் அவருக்கு பிறந்துள்ள குழந்தை dna மூலம் என்னுடையதுதான் என்று உறுதி செய்தால் மட்டுமே தான் அதற்கான பொறுப்பை ஏற்பேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் அறிக்கையை மட்டும் வெளியிட்டார். அதற்குப் பிறகு டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அவர் செல்லவில்லை என்று தொடர்ச்சியாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டி வருகின்றார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் செய்து முதலாவது ஆண்டை பூர்த்தி செய்துள்ளதாக உணர்வுபூர்வமான பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருந்தார் ஜாய் கிரிசில்டா.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவின் இன்ஸ்ரா பதிவில், எல்லோரும் தனக்கு டிஎன்ஏ டெஸ்ட் என்னாச்சு என்று கேட்பதாகவும், ரங்கராஜ் டெஸ்டுக்கு வருவாரா? என்று கேட்பதாகவும் குறிப்பிட்டு, அவர் எப்படி வருவார் அவரால் அறிக்கை மட்டும்தான் வெளியிட முடியும். அவரால் ஓடி ஒளிய முடியும். குழந்தை கொடுத்து ஓடி எத்தனை நாள் ஒளி வாரு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் டெஸ்ட் செய்ய முடியாது. ராகா ரங்கராஜுக்கு நிதி கிடைக்கும். அதுவரைக்கும் உங்கள் அன்பு, பிரார்த்தனை, ஆதரவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Listen News!