பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இறுதி கட்டத்தை எட்ட உள்ள நிலையில் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகின்றது. தற்போது ஒவ்வொரு வாரமும் இருவர் எலிமினேஷன் ஆகிய வெளியேறி வருகின்றனர். அதன்படி இறுதியாக அமித் மற்றும் கனி திரு ஆகியோர் பிக் பாஸில் இருந்து வெளியேறி இருந்தனர்.
இந்த சீசனின் ஆரம்பத்தில் இருந்து கனி திரு மிகவும் வலிமையான போட்டியாளர்களுள் ஒருவராக காணப்பட்டார். அவர் இறுதி பைனலிஸ்டுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இவர் சக போட்டியாளர்களுடன் அன்பாக பழகி வந்தார். இதனால் இவருடைய எலிமினேஷன் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், அவருடைய தங்கை நடிகை விஜீ வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி அவருடைய வீடியோவில், எப்படி இவ்வளவு அழகாக ஸ்ட்ராங்காக இருக்க முடியும் உள்ளேயும் வெளியையும் இவ்வளவு அழகாக எப்படி இருக்க முடியும்? தெளிவும் அர்ப்பணிப்பு எப்படி வந்தது என பல கேள்விகளை ஏற்படுத்திய பெரிய ஆச்சரியம் அவள்.. இங்கு அலப்பறைகள் எல்லாம் மேடை ஏறும் போது, ஆச்சரியங்கள் வீட்டுக்குள்ள இருக்க முடியுமா?
எனது அக்காவின் இந்த 84 நாட்கள் எங்கள் குடும்பத்திற்கான பெருமை. மனதளவில் வலிமை, தெளிவை, உணர்வுபூர்வமான தெளிவான நபர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எக்கச்சக்க இதயங்கள். இவ்வளவு இருந்தும் எப்படி எலிமினேட் ஆனார்? காரணங்கள் தேடினால் அது கார்ப்ரேட் கால்குலேஷனில் சென்று முடியலாம்.
கனி ஆட்டத்தில் இருந்தால் கட்டாயம் வெற்றி பெறுவார் என்று நாமினேட் செய்யப்பட்டவள் என் அக்கா. அதே காரணத்திற்காகத்தான் எலிமினேட் ஆனார் என்று நான் நம்புகின்றேன். அந்த ஸ்டேஜ் பிரம்மாண்டமானது. கனி அக்காவால் அந்த டைட்டிலை என்றைக்கும் வின் பண்ண முடியாது. அதே போல் அந்த டைட்டிலும் கனி அக்காவை எப்போதும் வின் பண்ண முடியாது.
இங்கு நான் உங்களுக்காக உருவாக்கி வைத்துள்ள ஸ்டேட் ரொம்ப குட்டி. நான் அவளுக்கு கிரீடம் அணிவிக்கப் போகின்றேன். டைட்டில் என்ன தெரியுமா 'கனி திரு' என்று பேசி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் இறுதியில் கனி கம்பீரமாக கிரீடத்துடன் அமைந்திருப்பது போல எடிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!