• Feb 27 2026

200 கோடியை விட்டுட்டு.. 2 லட்சம் கோடி சம்பாதிக்கவே விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய், சமீபகாலமாக தனது அரசியல் பயணத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என்ற அரசியல் கட்சியை தொடங்கி, முழுமையாக அரசியலில் ஈடுபடத் தயாராகி வரும் விஜய்யின் இந்த முடிவு, ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிலர் அவரை எதிர்கால அரசியல் மாற்றத்தின் முகமாக பார்க்கும் நிலையில், சிலர் அவரது அரசியல் அனுபவம் குறித்தும், நோக்கம் குறித்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இருப்பினும், இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், விஜய் தனது கட்சி மூலமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். மக்கள் சந்திப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜய், சினிமாவை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


இந்த அரசியல் பயணத்தின் முக்கிய கட்டமாக, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், விஜய்யின் கடைசி திரைப்படமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கருணாஸ் அதன்போது, “விஜய் 200 கோடி வருமானத்தை விட்டுட்டு அரசியலுக்கு வரவில்லை. 2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வருகிறார்.” எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement