விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது 13 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவடையே இன்னும் 21 நாட்களே எஞ்சியுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் காணப்படும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். இதன்போது போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை கூறி அவர்களை ஊக்கப்படுத்தி சென்றிருந்தனர்.
மேலும், கடந்த வாரம் கமருதீன் வீட்டின் தலைவராக இருந்ததால் அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. அவரை தவிர மற்றவர்களை நாமினேட் செய்தார்கள். அதில் இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கனி திரு மற்றும் அமித் ஆகிய இருவரும் எலிமினேட் ஆகி வெளியேறியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் விக்கல்ஸ் விக்ரமும் திவ்யாவும் கடுமையாக சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை பார்த்து ரசிகர்களும் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி வெளியான ப்ரோமோவில், இவங்களுக்கு ஹாட் ஆனா ஹாட்.. அதுவே திவ்யாக்கு எமோஷனல் ஆகக் கூடாதா.? என்று திவ்யா பேச, உங்க கால்ல வேணும் என்றாலும் விழுகின்றேன் என்று விக்ரம் திவ்யாவின் காலில் விழச்செல்லுகின்றார்.
இதன்போது உங்க டிராமா இங்க வேணா விக்ரம்.. நீங்களும் உங்க வைஃபும் பேசினது என்று திவ்யா அவருடைய வைஃபை பற்றி இழுத்து பேச, ஏங்க ஏன் இப்ப என்னுடைய வைஃபை பத்தி பேசுறீங்க என்று விக்ரம் ஆக்ரோஷமாக கத்துகிறார்.
மேலும் என்னுடைய வைஃப் போட்டியாளர் இல்லை.. எதற்காக அவரைப் பற்றி பேசுறீங்க என்று விக்ரமும் கத்தி பேச, அதற்கு மேலாக திவ்யாவும் கத்தி பேசுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!