தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்கள் சமீப காலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ திரைப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிசம்பர் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், படம் நல்ல விமர்சனங்களையும், வசூல் ரீதியாகவும் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.
‘சிறை’ திரைப்படம், நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்துடன், எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பும் கதைக்கு தேவையான ஆழத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக, துணை கதாபாத்திரங்களாக இருந்தாலும், அவர்களின் பங்கு படத்தின் ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் என்றாலும், சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் படத்திலேயே ஒரு தைரியமான முயற்சியை எடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையை, எந்தவித சலிப்பும் இல்லாமல், ரசிகர்களை கட்டிப் போடும் வகையில் திரையில் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.4.1 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வசூலாக பார்க்கப்படுகிறது.
Listen News!