தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் தன்னை நிரூபித்து வந்த சீரியல் நடிகை ராணி, தற்பொழுது ஒரு சூட்சுமமான சட்ட பிரச்சினையில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் மற்றும் செய்தி வட்டாரங்களிலும் தகவல்கள் பரவியுள்ளது.

சின்னத்திரையில் பன்முக திறமையுடன் நடித்த ராணி, தனது அறிமுகத்தை “அலை” என்ற சீரியலில் செய்தார். அந்த தொடரைத் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனித்த இடத்தைப் பிடித்திருந்தார். அவரது நடிப்பு, கதாபாத்திரங்களோடு ஒத்திசைவான மெல்லிய உணர்வு மற்றும் திறமை ஆகியவை, ரசிகர்கள் மத்தியில் தனித்துவம் பெற்றதாக காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடிகை ராணி ஒரு சட்டப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்த தகவலின் படி, ராணி மற்றும் அவரது கணவர் உள்பட மூன்று பேர் மீது கரூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ராணி மற்றும் தொடர்புடையவர்கள் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதோடு சேர்த்து, 5 சவரன் நகைகளை வாங்கி மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் தற்பொழுது தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றது. இந்நிலையில், தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!