பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காந்திமதி என்ர பொண்ணு, பேத்தி எல்லாம் எந்தக் காலத்தில பொலிஸ் ஸ்டேஷன் போனாங்க என்று சொல்லி அழுகிறார். அதைப் பார்த்த சக்திவேலோட மனைவி எல்லாத்துக்கும் என்ர புருஷன் தான் காரணம் என்கிறார். மேலும், பொலிஸ் ஸ்டேஷனில அவர் தானே போய் சொல்லிவிட சொன்னாரு என்கிறார். பின் காந்திமதி முத்துவேல் கிட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார்.

அதைக் கேட்ட சக்திவேல் அவங்க எப்புடி பொம்பிளைங்கள கூட்டிட்டுப் போவாங்க என்று கேட்கிறார். அதனை அடுத்து முத்துவேல் வண்டியை எடுத்துக் கொண்டு பொலிஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புறார். பின் ஸ்டேஷனில இன்ஸ்பெக்டர் பாக்கியத்தைப் பார்த்து அந்தக் குடும்பத்தைப் பார்க்க தப்பானவங்க மாதிரி தெரியல என்கிறார்.
அதைக் கேட்ட பாக்கியம் என்ர பொண்ணுக்கு நடந்ததெல்லாம் உண்மை என்று சத்தியம் பண்ணிச் சொல்லுறார். பின் இன்ஸ்பெக்டர் மயிலை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரச் சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியம் அவளால வரேலாது என்கிறார். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் வீட்ட போய் அந்தப் பொண்ணு கிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வரச் சொல்லுறார்.

மறுபக்கம் செந்தில் மீனாவுக்கு கால் எடுத்து உன்ர ஆபீஸுக்கு பொலிஸ் வரேலயா என்று கேட்கிறார். மேலும், மயில் குடும்பம் எங்க மேல கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க என்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவேல் ஸ்டேஷனுக்குப் போய் நிற்கிறார். ஸ்டேஷனில முத்துவேலைப் பார்த்தவுடனே ராஜியும் கோமதியும் கதறி அழுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!