தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் தான் ‘சிறை’. திரையரங்குகளில் வெளிவந்த நாள் முதலே ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரையுலகியர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்த படம், கதைக்களம், நடிப்பு மற்றும் இயக்கம் என்பவற்றால் நல்ல மதிப்பை பெற்றுள்ளது.

சினிமாவைப் பார்த்த பின்னர் மாரி செல்வராஜ், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் படத்தைப் பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்ட கருத்துகள் தற்போது இணையத்தில் பரவல் அடைந்து, ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்க்கின்றன.
மாரி செல்வராஜ் அதன்போது, “சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுக்கும்.” என்றார்.

மேலும் அவர், “அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருக்கிறது. தனது முதல் படத்திலே பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் இயக்குநர் சுரேஷ் இராஜகுமாரி மற்றும் ‘இந்தக் கதைதான் எனக்கு வேண்டும்’ என்று களமிறங்கியிருக்கும் விக்ரம் பிரபு அவர்களுக்கும்...
மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொள்கிறேன். இந்த சிறைக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்பவேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்த கருத்துகள், இயக்குநரின் திறமை மற்றும் விக்ரம் பிரபுவின் நடிப்பின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.
Listen News!