• Dec 29 2025

பாரதிராஜா உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.! என்ன தெரியுமா.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய கலைஞராக அறியப்படுபவர் பாரதிராஜா. கிராமிய வாழ்க்கையை இயல்பாகவும் நிஜத்தன்மையுடனும் திரையில் காட்டியவர் என்ற பெருமைக்கு உரிய இவர், இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.


1970களில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் தனித்துவமான அடையாளத்தை வைத்திருக்கும் பாரதிராஜா, காலத்தால் அழியாத பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திரையுலகில் அடையாளம் கிடைக்கக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பாரதிராஜா.

இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி வெளியானதும், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், கவலையும் ஏற்பட்டது.


சமூக வலைத்தளங்களில் “பாரதிராஜா உடல்நிலை எப்படி உள்ளது?” என்ற கேள்விகள் வேகமாக பரவி, பலரும் அவரின் உடல்நிலை குறித்து தகவல் அறிய முயன்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள், அவருக்காக பிரார்த்தனைகள் செய்து வந்தனர்.

இந்த சூழலில், பாரதிராஜா தரப்பில் இருந்து அவரது உடல்நிலை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. எந்த விதமான தீவிர உடல்நலக் குறைவும் இல்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement