பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வாரங்களை கடந்துள்ளது. கடந்த வாரத்தில் இறுதியாக அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது பிக் பாஸ் இல்லத்தில் பத்து போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர்.
இன்னும் மூன்று வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நிறைவு பெற உள்ளது. இதையொட்டி நேரடியாக இறுதிச்சுற்று செல்ல ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
அதற்கான போட்டிகளும் வைக்கப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் நபர் நேரடியாகவே இறுதிப் போட்டிக்கு செல்லுவார். எனினும் அது யாருக்கு கிடைக்க உள்ளது என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 85 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சகப் போட்டியாளர்களால் திவ்யா தாக்கப்படுகிறார். இதனால் அவர் அழுத காட்சிகள் வைரலாகி உள்ளன.

அதன்படி பிக் பாஸில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நீங்க நினைக்கும் போட்டியாளர்களை காரணத்துடன் சொல்ல வேண்டுமென ஹவுஸ்மேட்சுக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
அதில் முதலாவதாக திவ்யாவை கூறிய விக்ரம், நியாயமா பேசுறேன் என்று ரொம்ப செல்பிஷா பேசுற மிகப்பெரிய பிராடு.. சரியான ஈகோ புடிச்சவங்க.. மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கோழை..
எந்த ஒரு மாற்று கருத்தையுமே ஏற்றுக்கொள்ளாமல் இத்தனை வாரம் வந்தது ஒரு அயோக்கியத்தனம். நான்தான் உலகத்திலேயே நியாயம் கேட்கின்றேன் என்று பொய்யான வேடமும் பொய்யான முகம் மூடியும் அணிந்துள்ள சரியான பிராடு என்று திவ்யாவை சரமாரியாக பேசியுள்ளார் விக்ரம். இதைக் கேட்டு திவ்யா தனியாக இருந்து அழுத காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Listen News!