நடிகர் சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், சவாலான கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பராசக்தி’, வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயன், இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘பராசக்தி’ திரைப்படம் 2026 ஜனவரி 10-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படம், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில், சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வித்தியாசமான நட்சத்திரக் கூட்டணி, படத்தின் கதைக்கேற்ப வலுவான கதாபாத்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர், “செழியன் என்ற பெயரே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு இருந்த தாக்கம், தொலைநோக்குப் பார்வை, உணர்வுகளைத் தாண்டி எவ்வளவு வலிமையான படமாக இருந்தாலும், பொழுதுபோக்கிற்கான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.
இந்த ஒரு கருத்தின் மூலம், ‘பராசக்தி’ படம் வெறும் கருத்துப் படம் மட்டுமல்ல, அதே நேரத்தில் ரசிகர்களுக்கு முழுமையான என்டர்டெயின்மென்ட் வழங்கும் படமாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!