தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ‘தி ராஜா சாப்’. இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப ரசிகர்களைக் கவரும் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் மாருதியுடன், பிரபாஸ் முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆக்ஷன் மற்றும் வரலாறு சம்பந்தமான படங்களில் அதிகமாக நடித்த பிரபாஸ், இந்தப் படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தி ராஜா சாப்’ படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசை அமைத்து வருகிறார். தமனின் இசை பல மாஸ் ஹிட் படங்களுக்கு உயிர் கொடுத்துள்ள நிலையில், பிரபாஸின் திரைப்பயணத்தில் இந்த இசையும் முக்கிய பங்கு வகிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்பட விழாவில் இயக்குநர் மாருதி பேசிய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா மேடையில் அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அப்போது மாருதி, “‘தி ராஜா சாப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1 சதவீதம் கூட பூர்த்தி செய்யத் தவறினாலும், என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம். இதுதான் என் வீட்டு முகவரி. ரசிகர்கள் நேராக அங்கேயே வரலாம்.” என்று கூறியுள்ளார்.
Listen News!