சினிமா மற்றும் அரசியலில் தனித்துவமான முத்திரையை பதித்த மறைந்த நடிகர் விஜயகாந்தின் 2வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள், தொண்டர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாகக் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகர் கமல் ஹாசன் சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல் ஹாசன் தனது பதிவு மூலம் விஜயகாந்துடன் கொண்டிருந்த நட்பு, அவரின் தனித்துவமான குணம் என்பவற்றை நினைவுகூர்ந்தார்.
கமல் ஹாசன் கூறியிருக்கும் உரையில்,“ஈகை எனும் அருங்குணத்தால் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் அன்பிற்கினிய நண்பர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன,” என தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் பரவி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கமல் ஹாசன் கூறியுள்ள “ஈகை எனும் அருங்குணம்” என்பது விஜயகாந்தின் தனித்துவமான குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!