தமிழ் திரையுலகில் இளம் நட்சத்திரங்கள் மற்றும் மனம் கவரும் காதல் காட்சிகள் ஆகியவற்றின் கூட்டணியால் உருவாகும் படங்கள், ரசிகர்களிடையே விரைவில் வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில், இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK)” திரைப்படம், 2025 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பான ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

இந்த படத்தில், இளம் நட்சத்திரங்கள் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பு, காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த காட்சிகள், படத்தின் கதையுடன் நன்றாக ஒத்திசைந்துள்ளது.
“NEEK” படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது தனித்துவமான இசைத் திறனை இப்படத்தில் பதிவுசெய்துள்ளார். இதில் இடம்பெற்ற “கோல்டன் ஸ்பாரோ” பாடல், திரைப்படத்தின் இசையைப் பெரிதும் பிரபலமாகியது. இந்நிலையில், இந்தப் பாடல் குறித்த புதிய அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் இந்த பாடல் தற்போது 24 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது, 2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் பாடல்களில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
இதற்காக படக்குழுவினருக்கும் இயக்குநர் தனுஷுக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்துப் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
Highest viewed song in YouTube for Tamil films this year … thanks team #NEEK and my director @dhanushkraja … @theSreyas https://t.co/XJ5fettiQp #goldensparrow
Listen News!