எச். வினோத் - இளையதளபதி விஜய் கூட்டணியில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படம் விஜய் நடிக்கும் இறுதிப் படமாக காணப்படுவதால் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் முன்பதிவில் மட்டும் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முன்பதிவில் ஜனநாயகன் படம் 24, 500 டிக்கெட் விற்பனை செய்துள்ளதாகவும், மொத்தமாக 7.5 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!