• Dec 29 2025

சொத்து பிரச்சினையில் காணாமல் போகும் அண்ணாமலை; மனோஜ்க்கு எதிரான விஜயா

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில், ஏற்கனவே ரோகிணியின் மகன்தான் க்ரிஷ் என்ற விடயம்  மீனாவுக்கு தெரிய வருகிறது. ஆனால் அவர் வீட்டிற்கு சொல்லாமல்  ரகசியமாக வைத்து வருகின்றார்.  தற்போது ரோகிணிக்கு ஐடியா கொடுக்கும் முதல் ஆளாக மீனா காணப்படுகின்றார்.

இதைத்தொடர்ந்து  பிசினஸில் லாஸ் ஆகும்  மனோஜ், கந்துவட்டிக்காரனிடம் 30 லட்சம் வாங்கியதாகவும் அவர் அதற்காக அண்ணாமலையை  வீட்டை அடகு வைத்து  கையெழுத்து போடுமாறும் மிரட்டி வாங்குகின்றார்.  

இந்த நிலையில், தற்போது வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோவில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.  அதன்படி இந்த ப்ரோமோவில் சொத்தை நான்கு பங்காக பிரிக்குமாறு அண்ணாமலை கூறுகின்றார். 


ஆனாலும் அங்கு இருந்த முத்து, நீ உயிரோடு இருக்கும் வரைக்கும் சொத்தை பிரிக்க விடமாட்டேன் என்று சொல்ல,   அதான் அப்பா முடிவு பண்ணிட்டாருல  என்று மனோஜ் சொல்லுகின்றார்.

இதைக்கேட்ட முத்து கோவத்தில், ஏன்டா சொத்து சொத்து சொத்து என்று அலைஞ்சு கொண்டு இருக்கா என்று திட்டுகிறார். மேலும் அண்ணாமலையிடம் உனக்கு ஆசை இருந்துச்சு என்றால் சொத்தை பிரித்துக் கொடு.. ஆனால் அதை விக்கிறதுக்கு விடமாட்டேன் என்று சொல்லுகின்றார். 

இதனால் மனோஜ் சொத்தை  கேட்டு கேஸ் போட்டன்  என்றால்  யாரும் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்ல, முத்து உடனே அவருக்கு அடிக்க பாய்கிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  அண்ணாமலை காணாமல் போகின்றார். இதனால்     வீடு முழக்க அப்பாவை தேடிய முத்து,  இதெல்லாம் உன்னாலதான் என்று மனோஜ் உடன் சண்டை போடுகின்றார்.. 

அதன் பின்பு முத்துவிடம் பேசிய விஜயா, அண்ணாமலையை தேடி கண்டுபிடித்து வருமாறு சொல்லுகின்றார்.  இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. 

Advertisement

Advertisement