விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இந்த வாரம் யார் யார் வெளியேறி உள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், யார் டைட்டில் வெற்றி பெற போகின்றார்கள் என்று ரசிகர்களால் யூகிக்க முடியாமல் உள்ளது.
இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே இவர்தான் டைட்டில் வின்னர் ஆக வர வேன்டும் என ரசிகர்கள் உறுதி செய்து விடுவார்கள். ஆனால் இந்த சீசன் அதற்கு நேர் மாறாக காணப்படுகின்றது.

உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பாதிக்கு பாதி நெகட்டிவ் மைண்ட்டோடு தான் காணப்படுகின்றார்கள். இவங்க நல்லவங்களா கெட்டவங்களா என்று சொல்லக்கூட முடியாத நிலையில் ஒவ்வொருவருடைய கேம் பிளேயும் காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு ஆண் போட்டியாளரும் பெண் போட்டியாளரும் அடங்கி உள்ளனர்.
அதாவது இந்த வாரம் அமித் பார்கவ் மற்றும் கனி திரு ஆகிய இருவருமே பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .
Listen News!