தமிழ் சினிமாவின் தனித்துவமான சிந்தனையாளர், நடிகர், இயக்குநர் என பல அடையாளங்களை ஒரே நேரத்தில் சுமந்து வருபவர் பார்த்திபன். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், எழுதும் ஒவ்வொரு வரியும் தனித்த சிந்தனையையும், ஆழமான பொருளையும் கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில், பார்த்திபனின் புதிய தோற்றம், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ‘தளபதி திருவிழா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் சாயலில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் எழுந்தன.
இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு நடிகர் பார்த்திபன், தன்னுடைய பாணியிலேயே கவிதை கலந்த, ஆழமான விளக்கத்தை தற்போது அளித்துள்ளார். அவர் அதன்போது, “அவர் சாயலில் வரலாம் இன்னொருவர், சாதனையைக் கூட தொடலாம் பின்னொருவர்.

கமர்ஷியல் ஹீரோவாக சாதனை அவரது வசூல், கரைக்கானா கடல் போன்ற ரசிகர்களே அவரது மகசூல்! மனமே மகோன்னதம்! குதர்க்கமான அரசியல் என்ற அஜினோமோட்டோ கலக்காத, ஆர்கானிக்கான பாராட்டாக இதை சுவைக்கவும்.” என்று கூறியுள்ளார்.
இந்த வரிகள், வெறும் விளக்கமாக மட்டுமல்லாமல், விஜய்யின் திரையுலக சாதனைகள் மற்றும் ரசிகர்களின் பலத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளன.
Listen News!