தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நிலையான இடத்தைப் பிடித்த நடிகர் விஜய், தற்போது தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முக்கியமாக, இந்தப் படத்துடன் நடிகர் விஜய் தனது திரையுலக பயணத்தை நிறுத்தி, அரசியலில் முழு நேரமாக ஈடுபடவுள்ளார் என முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.
விஜய்யின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், நடிகரின் விலகல் குறித்து பல்வேறு கருத்துகளையும் வருத்தங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். அவருடைய திரையுலகத்துக்கு இது பெரிய மாற்றம் என்பதால், இது குறித்துப் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கருணாஸ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, விஜய் திரையுலகத்தை விட்டு விலகுவது தொடர்பான தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கருணாஸ் அதன்போது,“சினிமா ஒன்றும் அழிந்து விடாது. என்னை போன்ற பலரை வளர்த்து விட்டது சினிமா தான். அது அப்படியே தான் இருக்கும். யாருக்காகவும் காத்திருக்காது” எனக் கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவல் அடைந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
Listen News!