தெலுங்கு மற்றும் தமிழில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யாஷ், தனது 19-வது திரைப்படமாக உருவாகும் ‘TOXIC’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் ஆரம்ப அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதில் ஹிட் ஹீரோ யாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், அவருடன் இணைந்து கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதில் ஹுமா குரேஷி ‘எலிசபெத்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரம் யாஷின் கதைப் போக்கில் முக்கிய அம்சங்களை இணைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். அவரது இயக்கத் திறன் மற்றும் கதை சொல்லும் வித்தியாசமான காட்சிப்படுத்தல், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி வருகிறது.
Listen News!