தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் பிரபாஸ், சமீபத்தில் கலந்து கொண்ட "தி ராஜா சாப்" திரைப்பட விழாவில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த பேச்சு, ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள் குறித்து அவர் பேசிய இந்த உரை, திரையுலகில் உள்ள மரியாதை, பணிவு மற்றும் சீனியர்–ஜூனியர் உறவுகள் குறித்து ஒரு அழகான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பிரபாஸ் நடித்த ‘தி ராஜாசாப்’ (The Raja Saab) திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபாஸ், வரும் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர், “சங்கராந்திக்கு [பொங்கலுக்கு] வரும் படங்கள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும். மிக முக்கியமானது, சீனியர் சீனியர் தான். சீனியர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம். சீனியர்ஸுக்கு அடுத்ததாகவே நாங்கள் என்பது 100% உண்மை.” என்று கூறியிருந்தார்.
இந்த வார்த்தைகள், அவரது பணிவு மற்றும் திரையுலகில் சீனியர்களுக்கு அவர் அளிக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதாவது, பிரபாஸ் தனது பேச்சில் மெகாஸ்டார் சீரஞ்சீவி நடித்துள்ள “Mana Shankara Vara Prasad Garu” படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், அந்த திரைப்படத்துக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார்.
பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்கள் மூலம் பான்-இந்திய ஸ்டாராக மாறிய பிரபாஸ், எப்போதும் தனது பேச்சிலும் செயலிலும் பணிவையும் மரியாதையையும் கடைப்பிடிப்பவர் என அறியப்படுகிறார். இந்நிலையில், பிரபாஸ் பேசிய இந்த உரையின் வீடியோ கிளிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Listen News!