மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பின்பு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி உள்ளார் விஜய். தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்த விஜயை வரவேற்க கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியேறி காருக்குச் செல்லும் வழியில் விஜய் தடுமாறி விழுந்துள்ளார். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்பு காரில் இருந்து வெளியே வந்த ஒரு சில நிமிடங்களில் விஜயின் கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விஜய் சென்ற காரில் அவருடைய பாதுகாவலர், ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் இருந்துள்ளார்கள். விமான நிலையத்தில் இருந்து கூட்டத்தைக் கடந்து வெளியே வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி உடைந்து சேதமாகியுள்ளது. சிறிய விபத்து என்பதால் விஜய்,. அவருடைய பாதுகாவலர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
Listen News!