தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தொடர்பான பேச்சுகள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சண்முகபாண்டியன் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சண்முகபாண்டியனிடம், “அரசியலுக்கு விஜய் சென்றுள்ளார்.. ரேஸுக்கு அஜித் சென்றுள்ளார்.. இனி தமிழ் சினிமா எப்படி இருக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட தயாராகி வருவதும், அஜித் ரேஸிங் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருவது குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளிவரும் வரும் சூழலில், இந்த கேள்வி கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு சண்முகபாண்டியன், “அஜித், விஜய் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் சினிமா நின்று விடாது. யூடியூப் பிரபலங்கள் புதிதாக நடிக்க வருகிறார்கள். புதிய முகங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறார்கள். தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
சண்முகபாண்டியனின் இந்த கருத்து, தமிழ் சினிமா ஒரு சில நட்சத்திரங்களின் இருப்பில் மட்டுமே இயங்கவில்லை என்பதைக் குறிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலத்துக்கு காலம் புதிய நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உருவாகி வருவதால், தமிழ் திரையுலகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதை அவரது பேச்சு உணர்த்துகிறது.
Listen News!