• Jan 06 2025

விடுதலை 2 தமிழ் நாட்டு கலெக்சன் மட்டும் இத்தனை கோடியா? பின்னணியில் வெளியான உண்மை

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை 2.  இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

விடுதலை படத்தின் முதலாவது பாகம் சூரி நடிப்பில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்துடன் சூரியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இது தொடர்பான அப்டேட்டுகள், போஸ்டர்கள், டீசர் என்பன வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

d_i_a

எனினும் விடுதலை திரைப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றது. இதன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்திருந்தது.

இந்த நிலையில், விடுதலை திரைப்படத்தின் தமிழ்நாட்டு கலெக்ஷன் 42 கோடி என வலைப்பேச்சு அந்தணன்  தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், விடுதலை 2 படத்தின் படக் குழுவினர் சமீபத்தில் சக்சஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள். ஆனால் அதை சக்சஸ் மீட் அல்லாமல் ஒரு கெட் டு கெதராக நடத்தி இருந்தனர்.

இதன் போது வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய மாலை அணிவிக்கப்பட்டு அதில் தயாரிப்பாளர், சூரி, விஜய் சேதுபதி என அனைவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். 

இது நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பலர் தமது உழைப்பை கொட்டி தீர்த்து இருந்தார்கள். அவர்களை மகிழ்விக்கும் நோக்கிலேயே இந்த கெட் டு கெதர் நடைபெற்று உள்ளது.

இன்னொரு பக்கம் விடுதலை 2 படத்திற்கு என்னதான் பார்ட்டி வைத்தாலும் கமர்சியல் ரீதியாக இந்த படம் ஓடவில்லை. தயாரிப்பாளருக்கு 40 கோடி ரூபாய் நஷ்டம். ஆனாலும் இன்னொரு சாரார் தமிழ்நாட்டிலேயே 42 கோடி கலெக்ஷன் கிடைத்ததாக சொல்கின்றார்கள்.

மேலும் உலக அளவில் 70 கோடி ரூபாயை வசூலித்த காரணத்தினால் தான் இந்த சக்சஸ் பார்ட்டி நடைபெற்றதாகவும் சொல்லுகின்றார்கள். இதன் உண்மை விபரம் சரியாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement